Gpay மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்த 2வட மாநில வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவ மாணவியருக்கு கூகுள்பே மூலம் பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்த 2வட மாநில வாலிபர்கள் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் சுமார் 2 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே அவர்களைப் பிடித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனாஸ் ரூட் (வ.33), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்புகுமார் (வ.26) என்பதும் இவர்கள் இருவரும் தண்டலம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வருவதும் தெரியவந்தது.
மேலும் மனாஸ் ரூட் மற்றும் பப்புகுமார் போலீசாரிடம் நாங்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி முன்பு கஞ்சா விற்பனை செய்து வருகிறோம்.
அதே கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இதில் 50 பேர் பெண் வாடிக்கையாளர்கள் என்றும் கூகுள்பே மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறிய தகவல் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ஒரிசா, பீகார் போன்ற வடமாநிலங்களில் இருந்து கண்டெய்னர் மூலம் ஓட்டுநர்கள் ஒரு கிலோ கஞ்சா 2000 ரூபாய்க்கு வாங்கி வந்து ஸ்ரீபெரும்புதூரில் நான்காயிரம் ரூபாய்க்கு விற்பதாகவும். இங்குள்ள விற்பனையாளர்கள் அதை வாங்கி ஏழு கிராம் பொட்டலம் போட்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
4000 ரூபாய்க்கு வாங்குகிற கஞ்சாவை பொட்டலம் போட்டு 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்று அதிக அளவில் கல்லா கட்டுவதால் வட மாநில வாலிபர்கள் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனையாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் 80 சதவீதம் பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலை தொடர்ந்தால் நம் நாடு பேரழிவை சந்திக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.


No comments
Thank you for your comments