Breaking News

2,665 கட்டடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவு

சென்னை, ஆக.22-

சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,  சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அனுமதியின்றி கட்டப்பட்ட மற்றும் கட்டிட அனுமதி விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 2,403 கட்டட உரிமையாளர்களின் கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கவும் மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments

Thank you for your comments