Breaking News

75 ம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சி.. நடைபயனம்...

 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவள்ளூர் மேற்கு பாரதிய ஜனதா கட்சியின் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சி கொண்டாட வேண்டும் என்பதை குறித்து நடைபயனம் நடைப்பெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியினை மாவட்ட செயலாளர் அஸ்வின் மற்றும் லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தனர்.

 இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சியில் இருந்து ஆவடி செக்போஸ்ட் வரை நடைபயணமாக மேற்கொண்ட அண்ணாமலை அவர்கள் அங்கு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. அவர் தமிழகத்தின் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கையாக இந்த 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற வேண்டும் என்பது குறித்தும் ஊழல் செய்யும் அமைச்சர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஆவின் பால் நிறுவத்தில் ஊழல் குறித்தும் பேசினார்.



No comments

Thank you for your comments