சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2022-23 முதலாம் ஆண்டு துவக்க விழா
சேலம் :
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமையேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர்.காதர்நவாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக சோனா கல்விக் குழுமத்தின் நிர்வாகி சிதா வள்ளியப்பா, மற்றும் முதலாமாண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் கோபிநாத் ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் உரையாற்றியதாவது, பொழுது மாணவ மாணவிகள் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு சோனா கல்லூரி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார். மேலும் இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்கையில் சிறந்து விளங்க தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா பேசும்பொழுது சேலத்தில் 65 ஆண்டு பராம்பரிய மிக்க எங்களது கல்வி நிறுவனம் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது.
காத்தாடி வாழ்க்கை - குறும்படம்விளையாட்டு வினையானது
கலை அறிவியல் படிப்புகளுக்கும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு உள்ளது. தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்பை உறுதி செய்யும் வகையில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது என்றார். மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாக வேண்டுமென்று கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


No comments
Thank you for your comments