Breaking News

வியாபாரிகள் புகார் அளித்தால் அலைக்கழிக்கும் காவல்துறை... விக்ரம ராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தில் வியாபாரிகள் புகார் அளித்தால், வியாபாரிகளை அலைக்கழித்து, எங்களால் இவ்வளவு தான் முடியும் என்ற ஒரு சோர்வான பதிலை காவல்துறையினர் சொல்லி வருகிறார்கள்.


வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை காவல்துறையினருக்கு  தெரிவிக்க ஒரு டோல் ஃப்ரீ நம்பரை அறிவித்துள்ள பிறகும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து கொண்டிருக்கிறது. 


காத்தாடி வாழ்க்கை -  குறும்படம்
விளையாட்டு வினையானது

ரவுடிகள், மாமுல் வாங்குகின்றார்கள், பொருட்களை வாங்கிவிட்டு சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் செல்பவர்கள் மீது அரசு இரும்பு கரம் கொண்டு அவர்களை ஓடுக்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தினுடைய பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் ரங்கநாதன்  தலைமையில் காஞ்சிபுரத்தில்  நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமா ராஜா கலந்து கொண்டு வணிகர்களின் குறைகளை கேட்டறிந்து, வணிகர் சங்கங்களின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ஏ.விக்ரமராஜா,

தமிழகத்தில் வியாபாரிகள் புகார் அளித்தால் வியாபாரிகளை அலைக்கழித்து எங்களால் இவ்வளவு தான் முடியும் என்ற ஒரு சோர்வான பதிலை காவல்துறையினர் சொல்லி வருகிறார்கள் என்றும்  வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் முன்னிலையில் வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை காவல்துறையினருக்கு தெரிவிக்க ஒரு டோல் ஃப்ரீ நம்பரை அறிவித்தனர், அதன் பிறகும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது.

மேடையில் 4 கால் பிராணிபோல் தவழ்ந்து வந்து பதவி பெற்றார்...

 இபிஎஸ்-ஐ பங்கம் செய்த டிடிவி தினகரன்

ரவுடிகள் மாமுல் வாங்குகின்றவர்கள் பொருட்களை வாங்கிவிட்டு சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் செல்பவர்கள் ஆகியோர் மீது அரசு இரும்பு கரம் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும் என்றும்,

இது குறித்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளையும் தெரிவிக்க உள்ளதாக விக்ரமா ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

மேலும் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மத்திய மாநில அரசுகளுக்கு வாழ்த்துகளையும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

No comments

Thank you for your comments