Breaking News

மணிமங்கலம் இரட்டை கொலை வழக்கில் 4 பேர் கைது

 காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (25). இவரை கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த வழக்கில் தொடர்புடைய விக்கி என்கிற விக்னேஷ் வயது 23 சுகன் என்கிற சுரேந்தர் வயது 20 புளி மூட்டை என்கிற சதீஷ் வயது (20 ),சுதாகர் வயது (21) ரைசுல் இஸ்லாமுல் அன்சாரி (22) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த விக்கி என்கிற விக்னேஷ் , சுகன் என்கிற சுரேந்தர் ஆகிய இருவரும் தினமும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு  வந்திருந்தனர்.

விதிமுறைகள் மீறி மணல் கொள்ளை... 
அந்த குழியில் போட்டு அவர்களை மூட வேண்டும்... 
திராவிட கட்சிகள் மீது பாய்ந்த சீமான்..

இதனிடையே நேற்றிரவு முன் தினம் இரவு மணிமங்கலம் காவல் நிலையம் அருகாமையிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே விக்னேஷ், சுரேந்தர் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.

இதை அடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி  தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த மணிமங்கலம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்,இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ், லோகேஸ்வரன், டில்லி பாபு ஆகிய நான்கு பேரை கைது செய்து  அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் தேவேந்திரனை கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கில் இருவரையும் வெட்டிக் கொன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் அவர்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய, மேலும் பல கொலையாளிகளை  தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments