Breaking News

1 லட்சம் மின் இனைப்புகளை 6 மாதத்தில் வழங்கிய அரசு திராவிட முன்னேற்ற கழக அரசு -அமைச்சர் பெருமிதம்

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற மின்சக்தி பெருவிழா -குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.



 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் 75வது சுதந்திர தின பெருவிழாவை முன்னிட்டு "ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம்" என்ற வாசகத்தை முன்னிறுத்தி மின்சார பெருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், ஶ்ரீபெரும்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.



பின்னர், மின்சார பெருவிழா குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்,

இந்தியத் திருநாட்டின் 75-ஆவது  சுதந்திர தின அமுத பெருவிழாவினை  இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம்.. இப்பெரு விழாவினை முன்னிட்டு ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம்  ஒளிமயமான எதிர்காலம் @ 2047 என்ற நிகழ்ச்சி எல்லா பகுதியிலும் கொண்டாடி வருகிறது.

திராவிட முன்னேற்ற கழக அரசு ஒரு வருடத்திற்க்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இனைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட  வாக்குறுதியை ஆறு மாதத்தில் நிறைவேற்றியுள்ள அரசு நம் தமிழக அரசு.



தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளது. 

  புதிதாக வழங்கப்பட்ட மின் இணைப்புகள் 8.16 இலட்சம். தாழ்வழுத்த மற்றும் உயர் மின் பளு உள்ள பகுதிகளில் புதிதாக 8905 விநியோக மின் மாற்றிகள் மற்றும் திட்ட மேம்பாட்டிற்காக 24,036 விநியோக மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளது.

கூடுதலாக 47 துணை மின்  துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது.  742.21 சுற்று கி.மீ தூரம் மிக உயர் அழுத்த மின் வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.மேலும்,புதிய கம்பங்கள்,மின்கம்பிகள் பொருத்தும்பொழுது அதனை சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மின்சார துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி. எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, கூடுதல் தலைமை பொறியாளர் கி..சண்முகம்,  மாவட்ட நோடல் அலுவலர் அகஸ்டின் ரேமண்ட்  மற்றும் அரசு அலுவலர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments