காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய உறுப்பினர் பதவியேற்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக இருந்த 36 வது வார்டு பணியிடத்திற்காக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் கு.சுப்பராயனுக்கு ஆணையர் ஜி.கண்ணன் வெள்ளிக்கிழமை நடந்த நகர்மன்ற கூட்டத்தின் போது பதவியேற்பு செய்து வைத்தார்.
படவிளக்கம்.. கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கு.சுப்பராயனுக்கு(வலது ஓரம்)பதவியேற்பு செய்து வைக்கிறார் மாநகராட்சி ஆணையர் (இடது ஓரம்) ஜி.கண்ணன். உடன் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் சாதாரணக்கூட்டம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஆர்.குமரகுருநாதன்,ஆணையர் ஜி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் தீண்டாமை உறுதிமொழி மேயரால் வாசிக்கப்பட்டு அனைத்து மன்ற உறுப்பினர்களாலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டது.
திருக்குறள் ஒன்றை சொல்லி மேயர் கூட்டத்தை தொடக்கி வைத்தார்.கூட்டம் தொடங்கியதும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் காலியாக இருந்த 36 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற கு.சுப்பராயனுக்கு ஆணையர் ஜி.கண்ணன் பதவியேற்பு செய்து வைத்தார்.
பின்னர் புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஆணையரையும், புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் கு.சுப்பராயனையும் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கூட்டத்தில் 66 வகையான தீர்மானங்கள் மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன.மழைக் காலங்களில் சாலைகளில் நீர் தேங்காமல் இருக்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும், வரதராஜப் பெருமாள் கோயில் முன்பாக சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வசதிக்காக வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
துணை மேயர் ஆர்.குமரகுருபரன் பேசுகையில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றும் பேசினார்.



No comments
Thank you for your comments