Breaking News

மேல் கூரை பூச்சு விழுந்து பள்ளி மாணவன் பலி

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் அதிகாலை வீட்டின் மேல் கூரை பூச்சு விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் , அய்யம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த மூன்று நாட்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் நேற்று வழக்கம்போல் இரவு உணவை முடித்துவிட்டு எனது குடும்பத்துடன் படுத்துக் கொண்டிருந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் திடீரென வீட்டின் மேல் கூரை பூச்சூ விழுந்ததில் அவரது மூன்றாவது வகுப்பு படிக்கும் மகன் நேதாஜி தலையிலும் , அவரது உறவினர் மகள் மாளவிகாவுக்கு கால்களிலும் விழுந்தது.

பலத்த  காயம் ஏற்பட்டு இதுவரையும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பள்ளி நின்று நேதாஜி காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.

காயமடைந்த மாளவிகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments