Breaking News

ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இயங்கும் பள்ளி / கல்லூரி விடுதிகளில் தங்கி பயில விரும்பும் நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்களுக்கு (85%). மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவ / மாணவியர்களுக்கு (10%), பிற வகுப்பினர்கள் (5%) என்ற விகிதத்தில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/மாணவியர்கள் https://tnadw-hms.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை இணைய தளவழியில் விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு 05.02.2022 முதல் 20.07.2022 வரையிலும் கல்லூரி விடுதிகளுக்கு 18.07.2022 முதல் 05.08.2022 வரையில் பதிவேற்றம் செய்யப்படும்.

எனவே, விடுதிகளில் மாணவர்களை சேர்த்து கல்வியில் முன்னேற்றம் பெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments