44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு காவல் துறையினாின் மோட்டார் சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது, இதில் 188 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் துறையின் சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை இன்று (14.07.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து காவலான் கேட், மேட்டுத்தெரு, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் வழியாக பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் வரை 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுத்து சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.கணேசன் மற்றும் காவல் துறை காவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments