டிப்பர்லாரி ஏரி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் மீது டிப்பர்லாரி ஏரி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஸ்ரீபெரும்புதூர் தாம்பரம் சாலையில் பட்டுநூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூரை நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் மீது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்களும் லாரியின் அடியில் சிக்கி ஹெல்மெட் நசுங்கி ஒருவர் மேல் ஒருவராக கீழே விழுந்து லாரியின் டயருக்கு அடியில் மாட்டிக் கொண்டனர். இதில் லாரி ஏறி இறங்கியதில் இருவர் உடலும் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் லாரியை விட்டுவிட்டு ஓடிவிட்டார்
பின்பு இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சாலை விபத்தில் பலியானவர்களை குறித்தான எந்த தகவலும் தெரியாததால் இவர்கள் இருவரும் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தப்பி ஓடிய ஓட்டுனர் யார் என்பதையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சாலை விபத்தில் பலியானவர்கள் தாம்பரத்தைச் சேர்ந்த பார்த்திபன் வயது 31 விழுப்புரம் சேர்ந்த டேவிட் வயது 30 என தெரியவந்துள்ளது.
இன்று காலையில் நடந்த இந்த சாலை விபத்து ஸ்ரீபெரும்புதூரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments