Breaking News

பாரளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தலைமையில் பேருந்து நிழற்குடை அடிக்கல் நாட்டுதல் விழா

கோயம்புத்தூர் மாவட்டம் கூடலூர் நகராட்சி வார்டு எண் 26 ஏ.வி.பி  தெற்குப்பாளையம் பள்ளி அருகில் பாராளமன்ற உறுப்பினர் நிதி நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அடிக்கல் நாட்டுதல் விழா நீலகிரி  பாரளுமன்ற உறுப்பினர்  ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது. 


அதனைத் தொடர்ந்து புவனேஸ்வர் நகர் 25வது  வார்டில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டுதல், அதனைத் தொடர்ந்து குப்புசாமி நகர் 5வது வார்டில் 15வது நிதிக்குழு திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி பூங்காவில் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி நகரமன்ற தலைவர் அ. அறிவரசு, நகர மன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், கூடலூர் நகராட்சி ஆணையர் பால்ராஜ், 26வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கீர்த்தனா, 26வது வார்டு கிளை செயலாளர் உதயகுமார், 25வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சரண்யா சுரேஷ்குமார், 5வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சித்ரா, 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் துரை செந்தில், 9வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments