Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் 1191 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சான்றிதழை பெற்றார்

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டு தேர்தலில் திமுக வேட்பாளர் 1191 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சான்றிதழை பெற்றார்


காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு போட்டியிட அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் போட்டியிட்டார். ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்டு இறந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தமிழக தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் விடுபட்ட பகுதிகளுக்கு தேர்தல் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டு நடந்து முடிந்தது. நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு என்னும் பணி காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.

திமுக வேட்பாளர் சுப்பராயன் 1191 அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். இதில் மொத்தம் பதிவான வாக்கு 2597 அதில் திமுக வேட்பாளர் சுப்புராயன்  1759 வாக்கு எண்ணிக்கை பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் சுயேச்சை வேட்பாளர் வேணுகோபால் 568 வாக்கு பெற்றார்.


வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சுதா என்ற சுப்புராயன் வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் அதிகாரி காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.

அப்போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.

வெற்றிச் சான்றிதையைப் பெற்ற பின் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் மொத்தம்  திமுக 34, அதிமுக 8, பாமக 2, பிஜேபி 1, சுயேச்சை 6 வெற்றி பெற்று காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக அதிக பெரும்பான்மையில் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments