Breaking News

கோயம்புத்தூர் மாவட்டம், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர்  மாவட்டம், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மருத்துவப் படிப்பு முடித்த பட்டம் பெற்ற 104 பட்டதாரிகளுக்கும் பட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்    வழங்கினார். 

இந்நிகழ்வில்  மாவட்ட ஆட்சியர் மரு. ஜி.எஸ்.சமீரன், மருத்துவ கல்வி இயக்குனர் ஆர்.நாராயண பாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் (தொ.அ.ஈ) ராஜமூர்த்தி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா கல்லூரியின் டீன், டாக்டர் வி.ரவீந்திரன், என்.ஜி.மருத்துவமனை முதல்வர் சி.மனோகரன், மேலும் பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். 


கொரோனா காலகட்டத்தில் பட்டம் பெற்ற இம்மருத்துவர்களின் சேவையானது  அகில இந்திய அளவில் சிறப்பானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Thank you for your comments