காஞ்சிபுரத்தில் சிறார்களுக்கான மாநில வாள்வீச்சுப்போட்டி தொடக்கம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான சிறார்களுக்குரிய வாள்வீச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகேயுள்ள அண்ணா திருமண மண்டபத்தில் சிறார்களுக்கான மாநில அளவிலான வாள்வீச்சுப்போட்டி தொடங்கியது. 10 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமியர்களுக்கும், அதே வயதுடைய சிறார்களுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.
சென்னை, நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம்,சேலம்,திருநெல்வேலி உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
போட்டி தொடக்க விழாவிற்கு வாள்வீச்சுக்கழகத்தின் மாநிலத் தலைவர் சுப்பையா.தனசேகரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்டக் கழக தலைவர் ஆர்.விவேகானந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன்,மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்க மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் வரவேற்று பேசினார்.
விழாவில் சுழற்சங்க மாவட்ட ஆளுநர் பி.பரணீதரன்,மாநகராட்சி உறுப்பினர்கள் எஸ்.கே.பி.கார்த்திக்,கௌதமி திருமாதாசன் ஆகியோர் சிறுமியருக்கான வாள்வீச்சுப்போட்டிகளை தொடக்கி வைத்தனர்.தமிழகம் முழுவதுமிருந்து 25க்கும் மேற்பட்ட வாள்வீச்சுப்போட்டி நடுவர்களும், போட்டியாளர்களின் பெற்றோர்களும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இருநாட்களும் நடைபெறும் மாநில அளவிலான வாள்வீச்சுப்போட்டியில் வெற்றி பெற்றபவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
விரைவில் நாசிக்கில் நடைபெறும் தேசிய அளவிலான வாள்வீச்சுப்போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் தெரிவித்தார்.
விழாவில் வாள்வீச்சுப் போட்டியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் விஸவநாதன்,நீச்சல் பயிற்சியாளர் ஆனந்தன், ஊத்துக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபு, ஏ.கே.பரசுராமன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments