சென்னை நந்தனத்தில் - பிரமாண்ட கட்டடம் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் விரைவில் திறப்பு
சென்னை, ஜூலை 5-
சென்னை நந்தனத்தில் ரூ.365 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட 12 மாடி மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் தற்போது கோயம்பேட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை.
எனவே சென்னை நந்தனம்-அண்ணா சாலையில் தேவர் சிலை அருகே பிரமாண்டமான வகையில் மெட்ரோ ரயில் நிலைய தலைமை அலுவலகம் அமைக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது.
இந்த புதிய அலுவலகம் 3.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.365 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 'சி.எம்.ஆர்.எல். பவன்' என்ற பெயரில் இக்கட்டிடம், 12 மாடிகளுடன் ஒரு கட்டிடமும், தலா 6 மாடிகளுடன் 2 கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
6 மாடி கட்டிடத்தில் மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு கட்டிடம் வாடகைக்கு விடப்பட உள்ளது.
தற்போது இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு சில மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து 12 மாடி பிரமாண்ட கட்டிடம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த தகவலை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments