செந்தில் பாலாஜி கையில் 40 எம்.எல்.ஏக்கள்.. மகாராஷ்டிராவை போல் தமிழகத்தில் நடக்கும்?
சென்னை, ஜூலை 5-
எப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை நிறுத்துகிறாரோ, அப்போது தான் ஸ்டாலினை தமிழக முதல்வர் என நாங்கள் அழைப்போம் அதுவரை ஆளுநரின் ஆலோசகர் என நாங்கள் அழைப்போம்.
மகாராஷ்டிராவில் நடந்தது போல தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்துக்களின் உரிமை மீட்பு என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை நடத்தி வருகிறார்.
அந்த பயணத்தை கடந்த 28-ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி ஜூலை 31-ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், மதுரை மாநகர இந்து முன்னனி சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்கா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்;- எப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை நிறுத்துகிறாரோ, அப்போது தான் ஸ்டாலினை தமிழக முதல்வர் என நாங்கள் அழைப்போம் அதுவரை ஆளுநரின் ஆலோசகர் என நாங்கள் அழைப்போம்.
தமிழகத்தில் விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும் ஏன் என்றால் செந்தில் பாலாஜியின் கையில் 40 எம்.எல்.ஏ.களின் ஆதரவை வைத்து உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது போல தமிழகத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆதீனங்களை மிரட்டும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது. திமுகவினர் எதற்கு ஆதீனங்களை மிரட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்து பெண்களுக்கு சமஉரிமை எப்போதும் அளிக்கப்படுகிறது. ஆனால், கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருக்கின்றனர் என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
போகும் இடமில்லாமல் திமுகவை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments