Breaking News

வரலாற்று பொக்கிஷமாய் திகழும் வடக்குப்பட்டு கிராமம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் உள்ள ஒரகடம் தொழிற்பேட்டையில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது வடக்குப்பட்டு கிராமம்.

இக்கிராமத்தில் தொன்மைவாய்ந்த ஆதிகாலத் தமிழர்கள் வாழ்விடத் தடயங்களைக் கொண்ட சிறியமணல் மேடு ஒன்று காணப்படுகிறது.

இம்மேட்டுப்பகுதியில் இருந்து சிலநாட்களுக்கு முன்பு பழமைவாய்ந்த சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு சிறிய கூரை அமைத்து பொதுமக்கள் வழிபாடு செய்துவருகின்றனர்.  

இவ்விடத்தை வடக்குப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் அளித்த தகவலின் பேரில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வுமையத்தின் தலைவர் அஜய்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது

வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ளமணல் மேடானது தொல்லியல் அடையாள சான்றுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 

இங்கு சங்ககாலத்தைச் சேர்ந்த பானை ஓட்டுத் துண்டுகள், பழங்கால கட்டுமானக் செங்கற்கள், கற்கருவிகள் உள்ளிட்ட தடயங்கள் காணப்படுகிறது. 

இதை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவேண்டும் எனவரலாற்று ஆர்வலர்களும் பொது மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்தமணல் மேட்டிற்கு செல்லும் வழியில் உள்ள வயல் வெளி வரப்பில் உள்ள பழமை வாய்ந்த சிவன் மணல் சிற்ப சிலை ஒன்றும் உள்ளது. இது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள சிலைகளைப் போலவே உள்ளது. எனவே, இச்சிலை பல்லவர்கள்காலத்திய 7அல்லது 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் வயல் வெளியில் அழுகிய வேலைப்பாடுகளுடன் ஒரு இலட்சுமி சிலை உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.

வடக்குப்பட்டு செல்லியம்மன் கோயில் செல்லும் வழியில் பாதை ஓரத்தில் ஓர் அம்மன் சிலை சற்று சிதைவடைந்த நிலையில் வெட்ட வெளியில் காணப்படுகிறது. இது 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாகும்.

2500 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலத்தைச் சேர்ந்த கல்திட்டை வடக்குப்பட்டு  இவ்வளவு அரிய வரலாற்று புதையல்களை நேரடியாகக் கொண்டுள்ள வடக்குப்பட்டு கிராமத்தை தொல்லியல் துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகமும், கிராம நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வுமையத்தலைவர் அஜய்குமார் வேண்டு கோள்விடுத்தார்.



No comments

Thank you for your comments