Breaking News

கலைஞர் கருணாநிதியின் 99ம் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99ம் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் குமணன் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99ம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை M.N.கண் மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமை ஐயங்கார்குளம் அரசினர் ஆண்கம் மேல்நிலைப்பள்ளியில்  மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தொடக்கி வைத்தார்.பின்பு இலவச மூக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.



இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திமுக ஒன்றிய செயலாளர் குமணன், ஒன்றிய நிர்வாகிகள் வீரராகவன், திருநாவுக்கரசு, பரசுராமன், கன்னியப்பன், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட திமுகவினர் பொதுமக்கள் பயனாளிகள் பங்கேற்றனர்.


No comments

Thank you for your comments