குண்டர் தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான
1.தினேஷ் (29) த/பெ.சுப்பிரமணி, எண்.679, கோயில் குப்பம், வேப்பம்பட்டு கிராமம் திருவள்ளூர் மாவட்டம்,
2. சந்திரசேகர் (எ)சந்துரு (30) நெ.352, எம்.ஜி.ஆர் நகர், பேரம்பாக்கம் கிராமம், திருவள்ளூர் மாவட்டம்,
3. விக்னேஷ் (எ) விக்கி புஷ்பராஜ் ஏரிக்கரை, கசவநல்லதூர் கிராமம், கடம்பத்தூர் தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்,
ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க அன்று (29.06.22 ) உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments