Breaking News

வழிப்பறி மற்றும் தலைமறைவு குற்றவாளிகள் 6 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History Sheet Rowdies ) மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க திருப்பெரும்புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 

1) கைப்புள்ள ( எ ) ஞானபிரசாத் ( 21 )  த / பெ.செல்வம், வள்ளுவர் தெரு, வளர்புரம், திருப்பெரும்புதூர் தாலுக்கா, 

2 ) விஜய் ( 27 ) த / பெ பச்சையப்பன், பஜனை கோயில் தெரு, வளர்புரம், திருப்பெரும்புதூர் தாலுக்கா மற்றும் 

1 ) நாகராஜ்   ( 24 ), த / பெ.தெய்வசீலன், எழுத்துவீதி, சமத்துவபுரம், உளுந்தை அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்,

2 ) சுரேஷ் ( எ ) குயிக் சுரேஷ்  ( 25 )   . த / பெ.முருகன் , அம்பேத்கர் தெரு திருப்பெரும்புதூர் தாலுக்கா, 

3 ) அன்பு ( எ ) அன்பரசன் ( 25 ), த / பெ.சேகர், பெருமாள் கோயில் தெரு, வெங்காத்தூர், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் 

4 ) டேவிட் ( எ ) டேவிட்சன் ( 25 ) த / பெ. பஜனை கோயில் தெரு, கிறிஸ்துவகண்டிகை, மேவலூர்குப்பம் ஆகியோர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான குழு மேற்படி ஆறு நபர்களையும் இருங்காட்டுகோட்டை அருகே கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணையில் கைப்புள்ள ( எ ) ஞானபிரசாத், நாகராஜ் மற்றும் சுரேஷ் (எ) குயிக் சுரேஷ் ஆகியோர்கள்   ஏற்கனவே திருப்பெரும்புதூர் காவல் நிலைய ஆயுத தடை சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்ட வழக்கில் தலைமறைவு குற்றவாளிகள் என தெரியவந்தது. மற்ற எதிரிகளான 1) விஜய், 2 ) அன்பு (எ)அன்பரசன் மற்றும் 3 ) டேவிட் (எ) டேவிட்சன்  (எ) ஆகியோர்கள் மீது திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . எதிரிகள் ஆறு நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் , இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த காவல் ஆய்வாளர்  மற்றும்  காவல் ஆளிநர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

No comments

Thank you for your comments