தலைமறைவு குற்றவாளி உட்பட 3 நபர்கள் கைது - சிறையில் அடைப்பு
சுங்குவார்சத்திரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல், தலைமறைவு குற்றவாளி உட்பட 3 நபர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதற்கிணங்க 01.07.2022 அன்று சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாம்சங் கம்பெனி அருகே உள்ள முட்புதரில் 3 நபர்கள் சந்தேகமான முறையில் நின்றுகொண்டிருப்பதாக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கிருந்த எதிரிகள்
1 ) அருண் ( எ ) அருண்குமார் ( 24 ) த / பெ.ராகவேல், பஜனைகோயில் தெரு, வளர்புரம் கிராமம், திருப்பெரும்புதூர் தாலுக்கா, திருப்பெரும்புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி
2 ) சகா ( எ ) சீனிவாசன் ( 23 ) த/பெ குப்பன், பஜனைகோயில் தெரு, கீவளூர் கிராமம், திருப்பெரும்புதூர் தாலுக்கா, மற்றும்
3 ) ஜீவன் ( 20 ) த / பெ சரவணன், பஜனைகோயில் தெரு, கீவளூர் கிராமம், திருப்பெரும்புதூர் தாலுக்கா, என்பவர்களை திரு.பரந்தாமன், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் விசாரணை செய்து அவர்களிடமிருந்த சுமார் 3 கிலோ கஞ்சா போதை பொருளினை கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் சகா (எ ) சீனிவாசன் ஏற்கனவே திருப்பெரும்புதூர் காவல் நிலைய ஆயுத தடை சட்டம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்ட வழக்கில் தலைமறைவு குற்றவாளி என தெரியவந்தது.
பின்னர், மேற்படி எதிரிகளிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சுங்குவார்சத்திர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த சங்குவார்சத்திர காவல் நிலைய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டினார்.
மேலும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
No comments
Thank you for your comments