கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 117 குற்றவாளிகள் கைது... 103 வழக்குகள் பதிவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 117 குற்றவாளிகள் கைது -103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 44.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதற்கிணங்க காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் 01.01.2022 முதல் 30.06.2022 வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 117 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 44.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகள் மீது 103 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மேற்படி போதை வஸ்துகளை விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments
Thank you for your comments