Breaking News

தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் எஸ்.சி. / எஸ்.டி இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்


காஞ்சிபுரம்:

படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி. / எஸ்டி இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து எஸ்.சி. / எஸ்டி இளைஞர்களுக்கான ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை 16.07.2022 அன்று காஞ்சிபுரம், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது

இம்முகாமில் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.  8வது தேர்ச்சி, 10வது, 12வது, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, என்ஜினியரிங், படித்த வேலை நாடுநர்கள் இம்முகாமில் கலந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்,.  இம்முகாமில் கலந்துகொள்ளும் நிறுவனங்களுக்கும் எஸ்.சி/எஸ்.டி வேலைநாடுநர்களுக்கும் அனுமதி இலவசம்.  

மேற்கண்ட கல்வித் தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் தங்களுடடைய அசல் கல்விச் சான்றுகள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், மேலும், வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் நாளன்று காலை 10.00 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என  காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப. தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள். 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments