வேலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வழங்க அலைமோதிய கூட்டம்
வேலூர் :
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, தகுதியுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணி வரை வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 78 இடைநிலை ஆசிரியர்கள், 328 பட்டதாரி ஆசிரி யர்கள், 60 முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 466 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி, வேலூர் ஆட்சியர் அலுவலகம் பி பிளாக் 3- வது மாடி யில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவல கத்தில் நடந்து வருகிறது.
முதல்நாளான நேற்று இடைநிலை ஆசிரியருக்கு 88 பேர், பட்டதாரி ஆசிரியருக்கு 213 பேர், முதுகலை ஆசிரியருக்கு 100 பேர் என மொத் தம் 401 பேர், தங்களின் விண்ணப்பங்களை வழங்கினர்.
இன்று நூற்றுக்கணக்கானோர் தங்களின் விண்ணப்பங்களுடன் குவிந்தனர். தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்று தனித்தனி யாக விண்ணப்பங்கள் பெறும் பணியில் ஊழி யர்கள் ஈடுபட்டனர்.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் வழங்க வந்ததால் மாவட்ட கல்வி அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
No comments
Thank you for your comments