Breaking News

36-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு (Ballot Unit) முதல் மற்றும் இரண்டாவது சீரற்றமயமாக்கல் (First and Second Randamization) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் 02.07.2022 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு. டி.ஆர்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.  

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments