Breaking News

தமிழக கட்டிட தொழிலாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

தமிழக கட்டிட தொழிலாளர்கள் சங்கம் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம், எம். பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கமும் இணைந்து காஞ்சிபுரம் மேற்க்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் எம்.பெருமாள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.




காஞ்சிபுரத்தில் கட்டுமான பணியில் இருக்கும் அனைத்து கட்டிட ஒப்பந்ததாரர்களும் மற்றும் பொறியாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழக முழுவதும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உயர்ந்துள்ளதால் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் பெருமாள் நடத்தி தொழிலாளர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்  சங்கத்தின் உறுப்பினர்கள் கோரிக்கை சம்பந்தமான பிரச்சினைகளை விவாதிக்கப்பட்டு கூலி நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் இந்த வருடம் முதல் மேஸ்திரிகளுக்கு 900 ரூபாய் கூலியாகவும் உதவியாளர்களுக்கு 700 ரூபாய் கூலியாகவும் பெண் உதவியாளருக்கு 600 ரூபாய்ஆகும் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் இன்ஜினியர் அசோசியன் சங்கத்தின் சார்பில் இன்ஜினியர் பாலாஜி பாண்டுரங்கன் வெங்கடேசன் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடன் மாவட்ட செயலாளர் சங்கர் இணைசெயலாளர் சந்திரசேகர் பொருளாளர் சுப்பிரமணி துணைத்தலைவர் செல்வம் சூசை கன்னியப்பன் இளைஞரணி தலைவர் அன்பழகன் ஆகியோர் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments