Breaking News

ஜூலை 18ம் தேதி காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு

காஞ்சிபுரம், ஜூலை 13-

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரும் ஜூலை 18 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் ஒருவரான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையிலான குழுவினர் தெரிவித்தது.


அண்ணா பிறந்த புனித மண் காஞ்சிபுரம்.அவரது உருவப்படத்துடன் உள்ள கொடியுடன் கூடிய அதிமுக என்ற மாபெரும் கட்சியை எம்.ஜி.ஆர்.உருவாக்கினார்.அவருக்குப் பின்பு வந்த ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்.அவருக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை. 

50 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக நடந்து வந்த கட்சியை எடப்பாடி கே.பழனிசாமியும்,கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரும் பிளவுபடுத்தி விட்டார்கள்.கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருபவரை எதிர்க்கிறார்கள்.

பொதுச்செயலாளர் என்ற பதவி ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் என்று ஒருங்கிணைப்பாளரும்,துணை ஒருங்கிணைப் பாளரும் இணைந்து கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.எனவே பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பதவியே செல்லாது.கட்சியில் 80 சதவிகித தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமே இருக்கிறார்கள்.

எனவே ஒபிஎஸ் ஆதரவாளர்களாகிய நாங்கள் ஒரு முடிவு செய்துள்ளோம்.வரும் 18 ஆம் தேதி காவலான் கேட் பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி,கே.முனுசாமி உள்ளிட்டோரின் செயல்களை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் ஆர்.வி.ரஞ்சித்குமார் தெரிவித்தார்.

படம் உள்ளது..தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளரும்,இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டு கொடுத்த கடிதத்தை காட்டும் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையிலான ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

No comments

Thank you for your comments