10-07-2022 அன்று கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்
இரண்டு தவணை தடுப்பூசி தகுதிவாய்ந்த அனைத்து மக்களும் செலுத்திக் கொண்டதால் கொரோனா பரவல் இந்தியாவில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு சீன மக்களின் அன்றாட வாழ்க்கை கொரோனா உயிர்கொல்லி நோயால் தற்சமயம் முடக்கப்பட்டுளள்து என்ற நிலை மீண்டும் உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா என்ற கொடிய உயிர்கொல்லி நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதிற்குமேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி வரும் 10.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மேலும் 15 லிருந்து 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் 12 முதல் 14 வயது தடுப்பூசி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17.03.2022 லிருந்து தொடங்க பட்டுள்ளது. அனைத்து தகுதிவாய்ந்த பயனாளிகள் பெற இலக்கு 26,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 60 வயதுக்கு மேல் இணைநோய் ரத்த அழுத்தம், சக்கரை வியாதி இல்லவிட்டாலும், தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனைவருக்கும் ஓட்டுமொத்த தடுப்பூசியை உறுதிப்படுத்தும் வகையில் குறிப்பாக முன்களப்பணியாளர்களுக்கு தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள மேலும் ஒரு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) அறிவுறுத்தியபடி 10.01.2022 லிருந்து முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் இந்த முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
(காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் என மொத்தம் 8739 பேர் உள்ளனர்.) இரண்டாம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிசீல்டு) செலுத்தி கொண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. (இதுவரை 7,386 பேர் மட்டுமே ( 84.5 % ) தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.)
காஞ்சிபரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகளிலும் கோவாக்சின் தடுப்பூசியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு மூலமாகவும் கோவிசீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (94.35 %) இலக்கையே எட்டியுள்ளது.
கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 28 நாட்கள் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 84 நாட்கள் ஆகும். இதுவரை 2,15,321 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர். எனவே பயனாளிகளை நேரடியாக மற்றும் தொலைப்பேசி மூலமாக தொடர்புகொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குருஞ்செய்தி அனுப்பியும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் . அதேப் போல கிராம வாரியாக ஆட்டோக்களின் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலமே நோய் எதிப்பு சக்தி முழுமையாக கிடைக்கும்.
இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் மற்றும் இறப்பை தடுக்க முடியும் என இந்திய மருத்துவ க் கழகம் அறிவித்துள்ளது.
நம்முடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க நாம் ஓவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
எனவே 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தபட்டுள்ள 2118 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தை களும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயத்திற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி யையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்திகொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments