முதன்முறையாக சேலத்தில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் 24 வயது நபருக்கு அரிதான கான்டூரா பார்வை அறுவைசிகிச்சை
சேலம்:
சேலம், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஒரு அரிதான மற்றும் அதே நேரத்தில் மிகவும் சிக்கலான கான்டூரா பார்வை அறுவைசிகிச்சையை 24 வயதாகும் நோயாளி ஒருவருக்கு செய்திருக்கிறது. இத்தகைய சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது தனிச்சிறப்பானதாக ஆக்கியிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் கருங்கல்பட்டி ஊரைச்சேர்ந்த பிரவீன் என்ற நபருக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிக்கலான, மிக நுட்பமான மற்றும் அரிதான அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருப்பது குறித்த விவரங்களை சேலம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர். E. கற்பகவல்லி பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வின்போது, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குநரும், கண் ஆராய்ச்சி மையத்தின் தலைமை செயலருமான டாக்டர். அதியா அகர்வால், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் மண்டல தலைவர் டாக்டர். ஆர். கலாதேவி மற்றும் சேலம் மாநகராட்சியின் துணை ஆணையர் திரு. எம். மாடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பொதுமக்கள் மத்தியில் கண் நோய்கள், பாதிப்புகள் மற்றும் சிகிச்சையின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதை உணர்ந்திருக்கும் சேலம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, இதற்கு தீர்வு காணும் ஒரு முயற்சியாக 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் மருத்துவருடன் இலவச ஆலோசனைத் திட்டத்தை வழங்க சமூக நோக்கத்துடன் முன்வந்திருக்கிறது.
அத்துடன் லாசிக் ஒர்க்அப் சிகிச்சை தொகுப்புக்கான கட்டணத்தில் 50மூ தள்ளுபடியையும் இது அறிவித்திருக்கிறது. இந்த இரு சிறப்பு சலுகைகளும் 2022, ஜுலை 31 வரை அமலில் இருக்கும்.
சேலம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர். E. கற்பகவல்லி, இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சை குறித்து கூறியதாவது, ‘‘பிரவீன் என்ற இந்த இளைஞருக்கு இரு கண்களிலும் பார்வைக்குறைபாடு இருந்தது. இதனால் கடந்த 15 ஆண்டுகளாகவே இவர் மருத்துவ பரிந்துரைப்பின்படி கண் கண்ணாடிகளை அணிந்து வந்தார்.
கண் விழிப்படல பிறழ்ச்சிகளின் காரணமாக தெளிவான பார்வைத்திறன் இவருக்கு இல்லாததால் வாழ்நாள் முழுவதும் கண் கண்ணாடிகளை அணிந்திருக்க வேண்டுமென்று இவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய கண்விழிப்படல பிறழ்ச்சிகள் குறைபாட்டினால் 10,000 நபர்களுள் ஒரே ஒருவர்மட்டுமே பாதிக்கப்படுவதால் இவருக்கு இருந்த பாதிப்பு அரிதான கண் பிரச்சினையாகவே கருதப்படுகிறது.
இவருக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுவதற்கு முன்னதாக 3 அடி தூரத்தையும் கடந்து இருக்கும் எதையும் இவரால் பார்க்க இயலாத நிலை இருந்தது. விரிவான கண் பரிசோதனை மற்றும் மதிப்பீட்டிற்கு பிறகு கான்டூரா பார்வை அறுவைசிகிச்சை என அறியப்படும் சிகிச்சையை இவர் செய்துகொள்வது நல்லது என்று நாங்கள் யோசனை தெரிவித்தோம்.
எங்களது ஆலோசனையை ஏற்றுக்கொண்ட இவருக்கு இந்த அறுவைசிகிச்சைக்குப்பிறகு மற்றவர்களைப்போல இயல்பான பார்வைத்திறன் உடனடியாகவே திரும்ப கிடைத்தது என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments