சேலத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவும் கொரோனா
சேலம், ஜூலை 5-
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் இரு தினம் முன் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ப ட்ட நிலையில் நேற்று மேலும் 40 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் சேலம் மாநகராட்சியில் 24 பேர், ஓமலூர் 5, நரசிங்கபுரம் நகராட்சி 3, நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், சங்ககிரி, பனமரத்துப்பட்டி, தலை வாசல், வாழப்பாடியில் தலா ஒருவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 25 பேர் குணமாகி வீடு திரும்பினர். மேலும் 218 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும், வாகனங்கள், அலுவலகங்களில் தணிக்கை செய்ய உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறையினர், போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவ மனைகள், மருவத்துவ கல்லூரியிலும் தினமும் 1500 பேர் வரை பரிசோதனை செய்து கொள்கிறார்கள். பரிசோதனையும் அதிகப்ப டுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments
Thank you for your comments