ஸ்ரீ சைதான்யா டெக்னோ பள்ளியில் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சேலம் :
சேலம் ஸ்ரீசைதான்யா டெக்னோ பள்ளியின் மாணவ, மாணவியர் சிபிஎஸ்சி தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீ சைதான்யா டெக்னோ பள்ளி இந்தியாவில் பல மாநிலங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ்நாட்டில் சேலம் குரங்குச்சாவடி பகுதியில் இயங்கி கொண்டிருக்கும் ஸ்ரீசைதான்யா டெக்னோ பள்ளியில் சிபிஎஸ்சியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 328 மாணவ, மாணவியரும், 10-ம் பொதுத்தேர்வில் 322 மாணவ, மாணவியரும் தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.
12-ம் வகுப்பில் 493 மதிப்பெண் பெற்று லிகிதா ஹெப்சிபா முதலிடத்தையும், 489 மதிப்பெற்று லோகித் சூர்யா 2-ம் இடத்தையும், 487 மதிப்பெண் பெற்று வர்ஷினி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் 148 பேர் 400 மதிப்பெண்ணுக்குமேல் பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் பெற்று வர்ணவி முதலிடத்தையும், 494 மதிப்பெண்பெற்று நேத்ரா ஆதர்ஷினி 2-ம் இடத்தையும், 492 மதிப்பெண் பெற்று ஆதிரா 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் 28 பேர் 485 மதிப்பெண்ணுக்குமேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பள்ளியில் பாராட¢டு விழா நடைபெற்றது. இதில் மூதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைபொது மேலாளர் ஹரிபாபு, உதவி பொதுமேலாளர் வெங்கட கிருஷ்ண ரெட்டி, பள்ளி முதல்வர் மாலதி ராஜா, தனசேகரன், துணை முதல்வர் ஸ்ரீமதி, ஸ்ரீதர், மண்டலகல்வி நிலைய தலைவர் சேகர் மற்றும் பணீந்திரபாபு, கௌதம், ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி ஊழியர்கள் என அனைவரும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments