Breaking News

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆக.18ம் தேதி முதல் போராட்டம் - உண்ணாவிரதம் அறிவிப்பு

காஞ்சிபுரம் :

'ஓவர் லோடு' ஏற்றும் குவாரி - கிரஷர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய போக்குவரத்து துறை அமைச்சர் - போக்குவரத்து ஆணையரை, அனைத்து மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

அனைத்து மாவட்ட மணல் லாரி உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் ஸ்ரீ பெரும்புதூரில்  நடந்தது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் காஞ்சி தீனன் தலைமைத் தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட மணல் லாரிகளின் தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தார். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் லாரி உரிமையாளர்களின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என, நூற்றுக் கணக்கானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

அதிக பாரம் ஏற்றும் குவாரி - கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து ஆணையர் ஆகியோரை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. 

இது தொடர்பான நடவடிக்கை எடுக்க இன்னும் காலம் தாழ்த்தினால் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் - உண்ணாவிரத்தில் இறங்குவோம்.


கனிமம் வெட்டி எடுப்பதில் - எம்.சான்டு தயாரித்து விற்பனை செய்வதில் நடக்கும் முறைகேடுகளையும், கொள்ளையார்களையும், மலை சரிவில் நடக்கும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக மின்னணு வழி கட்டண ரசீது நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இக்கூட்டத்தில் துணைத் தலைவர் சீனு ,இணைச் செயலாளர் பூவை மனோகர், காஞ்சி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் கௌரவ தலைவர் அபிஷேக் ராஜேஷ் ஸ்ரீபெரும்புதூர் பழனி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments