தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் வருகை NMMS செயலி மூலம் பதிவு...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகையை தேசிய தொலைபேசி கண்காணிப்பு அமைப்பு செயலி (NMMS ) மூலம் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்தல்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2021-22 நிதியாண்டு முதல் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகை பதிவு 21.05.2021 முதல் இரு முறை NMMS செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டால், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் nregsSoft இல் கைமுறையாக வருகைப் பதிவை அனுமதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக இயக்குநர் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) புதுதில்லி அவர்களின் கடிதத்தில், 16.05.2022 முதல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் NMMS செயலி மூலம் மட்டுமே வருகை பதிவு மேற்கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 01.05.2022 முதல் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கையால் எழுதப்படும் (Manual NMR) வருகைப்பதிவேட்டினை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே முழுமையாக NMMS செயலியில் வருகை பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
16.05.2022 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் காலை 9.00 மணி முதல் 11 வரையிலும், மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் NMMS செயலியில் வருகை பதிவு மேற்கொள்ள முடியும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் அனைத்தும் NMMS செயலி மூலம் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள விவரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் /பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments