Breaking News

இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை மனு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் ஏரிக்கரை கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்களை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் ஏரிக்கரை கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும்  ஏரி புறம்போக்கு நிலத்தில் சுமார் 60 ஆண்டுகளாக குடியிருந்து வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் நாங்கள் குடியிருக்கும் பகுதி மேடான பகுதி இந்த பகுதியை தமிழக அரசு நீர்பிடிப்பு பகுதி என்று கூறி தமிழக அரசு  குடியிருப்புகளை அகற்ற கோரி நோட்டீஸ் வழங்கி உள்ளனர். 


60 ஆண்டு காலமாக 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.  தொழிற்சாலை நகரமாக விளங்கி வரும் பகுதியில் வேலைக்கு சென்று வர வசதியாகள்ள பகுதியாக இருப்பதால் அதே பகுதியில் குடியிருக்க எங்களுக்கு ஆணை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர்.


இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் உமா தேவராஜ், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வாழும்   விசிக உறுப்பினர்கள் செல்லம்மாள், குமாரி, ஆஷா, ஜெயஸ்ரீ, கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

No comments

Thank you for your comments