Breaking News

திண்டுக்கல் ஐ.லியோனி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புரட்சி பாரத கட்சியினர் மனு

பொதுவெளியில் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தை இழிவாக பேசி சித்தரித்து சாதிய வன்கொடுமை பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர் இடம் புரட்சி பாரத கட்சியினர் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த 19ஆம் தேதி மாலையில் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி பணிகளின் கழகத்தின் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, சென்னை மாநகராட்சி மேயராக பட்டியலின பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதை குறித்து சட்டையை கழற்றி அக்குளில் வைத்திருந்த சமூகம் தனது செருப்பை கழற்றி தலையில் வைத்துக் கொண்டிருந்த சமூகம் என மிகவும் கீழ்த்தனமாகவும் கேவலமாகவும் பொதுமக்கள் மத்தியில் பொதுவெளியில் திட்டமிட்டு பட்டியலின மக்கள் மற்றும் பெண்களை அவமானமாக பேசியுள்ளார்.


இவர் பேசிய பேச்சில் உள்நோக்குமும் பட்டியலின சமூகத்தைப் பற்றி வருங்கால சந்ததிகளுக்கு தவறான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செருப்பை தலையில் சுமந்த சமூகம் என்ற செய்தியை திணிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பட்டியலினத்தவரை மேயராக்கியது தனது கட்சி தான் என்று தவறான செய்தியை பரப்பி வருகிறார்.

இதனை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியார்  தலைமையில் ஆனா புரட்சி பாரத கட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தனசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட புரட்சி பாரத கட்சியினர் திண்டுக்கல் ஐ லியோனி மீது பட்டிலியனர் பழங்குடியின சமூகத்தை பொதுவெளியில் இழிவாக பேசியும் சித்தரித்தும் சாதிய வன்கொடுமையின் பேசிய அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் மனு அளித்தனர்.



No comments

Thank you for your comments