வேகவதி ஆற்றின் கரையோர மக்கள் வீடுகளை அப்புறப்படுத்துவது கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
வேகவதி ஆற்றின் கரையோர மக்கள் வீடுகளை அப்புறப்படுத்துவது கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல். ஏராளமான போலீசார் குவிப்பு திடீர் பதட்டம் நிலவியது...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேகவதி ஆற்றங்கரை பகுதிகளில் சுமார் 1460 குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவதால் உயர்நீதிமன்ற உத்தரவின்படி வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றி விட்டு வேகவைத்து அதை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆற்றங்கரை பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களை காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் குடியமர்த்துவதற்கு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் 2112 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் பொதுமக்களின் பங்களிப்பாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை இன்னும் சில நாட்களில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அறிந்து ஏராளமான வேகவதி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் பாதிக்கப்படும் மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருக்கும் தங்களின் வீடுகள் அகற்றக்கூடாது என கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின்சாலை மறியல் குறித்து அறிந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
No comments
Thank you for your comments