மனைவி கண் முன்னே கணவனை குத்தி கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனையும்
குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நிலம் விற்பனை செய்வதில் தகராறு. மனைவி கண் முன்னே கணவனை குத்தி கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் தீர்ப்பு வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்காவிற்கு உட்பட்ட நந்தம் பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது பெயரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் முன் தொகை பெற்றுள்ளார்.
மேலும் நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும், அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் நந்தம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கோதண்டன் சந்திரன் ஆகிய மூவரும் சேர்ந்து செல்வத்தை அவரது மனைவியின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றமான, விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரசுதரப்பு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வாதாடி குற்றம் நிருபித்ததை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி எம். இளங்கோவன் இன்று செல்வத்தை கொலை செய்த ராஜ்குமார் கோதண்டன், சந்திரன்,ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளிகள் 3 பேரையும் குன்றத்தூர் போலீசார் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
No comments
Thank you for your comments