உத்திரமேரூரில் மின் மயானம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
உத்திரமேரூரில் மின் மயானம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மூலதன மானிய திட்ட நிதி (2021-22)ன் கீழ் உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் இந்து சுடுகாடு (சர்வே எண் 435)ல் மின் மயானம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையானது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் B.Sc,MLA அவர்களும் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் க.செல்வம் அவர்களும் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில் உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றியக் குழு உறுப்பினருமான கெ.ஞானசேகரன் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வசந்தி குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன்,பேரூர் கழக செயலாளர் N.S.பாரிவள்ளல், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார்,உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற துணை தலைவர் இளமதி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் மற்றும் திமுகவினர், அரசு கதிகாரிகள் கலந்துகொண்டனர்.
.jpg)

No comments
Thank you for your comments