Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியிடங்களுக்கு 09.07.2022 அன்று தற்செயல் தேர்தல்கள் நடைபெறவுள்ளது

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியிடங்களுக்கு 09.07.2022 அன்று தற்செயல் தேர்தல்கள் நடைபெறவுள்ளது



காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022 வரை எற்பட்டுள்ள காலியிடங்களுக்கு 09.07.2022 அன்று தற்செயல் தேர்தல்களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிக்கை 20.06.2022 அன்று வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் துவங்கும். வாக்குப்பதிவு 09.07.2022 அன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 12.07.2022 அன்று நடைபெறும்.

காலியிட விவரங்கள் :

I.நகர்புறம்

வ.எண்.

மாவட்டம்

மாநகராட்சி

வார்டு எண்.

1

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி

36

II.ஊரகம்

வ.எண்.

மாவட்டம்

மாநகராட்சி

வார்டு எண்.

1

உத்திரமேரூர்

அனுமந்தண்டலம் ஊராட்சி

6

2

உத்திரமேரூர்

கருவேப்பம்பூண்டி ஊராட்சி

3

3

திருப்பெரும்புதூர்

சிவபுரம் ஊராட்சி

5

          காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியிடங்கள் கட்சி அடிப்படையிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் காலியிடங்கள் கட்சி அடிப்படை அல்லாமலும் தேர்தல்கள் நடைபெறும். 

தேர்தல் அட்டவணை:

1.

தேர்தல் அறிவிப்பு வெளியிடுதல் மற்றும் வேட்புமனுக்கள் பெறுவதற்கான ஆரம்ப நாள்

20.06.2022

மு.ப 10.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை

2.

வேட்பு மனுக்கள் பெறுவதற்கான கடைசி நாள்

27.06.2022

3.

வேட்பு மனுக்கள் பரிசீலனை

28.06.2022

மு.ப. 10.00 மணி

4.

வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல்

30.06.2022

பி.ப. 3.00 மணி வரை

5.

வாக்குப்பதிவு நாள்

09.07.2022

காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை

6.

வாக்கு எண்ணிக்கை துவங்கும் நாள்

12.07.2022

காலை 08.00 மணி

7.

தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும் நாள்

14.07.2022



காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3-அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும் 2-ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 7 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.


வாக்குப்பதிவு : 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு வாக்குச் சீட்டுகளும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும். 

நடத்தை விதிகள் : 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நேர்வில் தொடர்புடைய மண்டல முழுமைக்கும் நடத்தை விதிகள் பொருந்தும் மற்றும் கிராம வார்டு உறுப்பினர் தேர்தல் நேர்வில் தொடர்புடைய கிராம ஊராட்சி முழுமைக்கும் பொருந்தும். 

மேற்படி மாதிரி நடத்தை விதி தொகுப்பானது தேர்தல் அறிவிக்கப்படும் (18-06-2022) நாள் முதல் தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும் நாளான 14-07-2022 வரை மேற்சொன்ன பகுதிகளில் அமலில் இருக்கும்.

 வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments