தேவரியம்பாக்கம் கிராமத்தில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேரூந்து
வாலாஜாபாத், ஜூன் 21-
வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகம் பயணிக்கும் நேரமான காலை மாலை வேளைகளில் பேரூந்துகள் நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமாரிட புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் தேவரியம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று புகார்களை கேட்டதுடன் அவ்வழியாக வந்த பேரூந்துகளை நிறுத்தி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர்களை பேரூந்தில் ஏற்றி விட்டதுடன் ஓட்டுநர் மற்றம் நடத்துனர்களிடம் தேவரியம்பாக்கம் பேரூந்து நிறுத்தத்தில் பயணிகளை தவறாமல் நிறுத்தி ஏற்றி செல்லுமாறு வேண்டுகோளும் விடுத்தார்.
இதுபற்றி அஜய்குமார் அவர்கள் தெரிவித்ததாவது, இப்பகுதி கிராமாங்களான தேவரியம்பாக்கம், லிங்காபுரம், நல்லூர், தோண்டாங்குளம், கொசப்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்து பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் பயணம் செய்யும் முக்கிய பேரூந்து நிலையமாகும்.
மேலும் உச்சபட்ச பயணியர் அதிகளவில் பயணிக்கும் நேரமான அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களில் பேரூந்துகள் நிற்காமல் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
பேரூந்து நிறுத்தத்தின் இரண்டு புறங்களிலும் குடிநீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட வேண்டும், இப்பகுதியில் பணிக்கு செல்வோர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதால் தோண்டாங்குளம் தேவரியம்பாக்கம் வழியாக ஒரகடம் மற்றும் தாம்பரம் வரை செல்ல புதிய பேரூந்து இயக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments
Thank you for your comments