கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் அவருடைய மனைவி ஷாலினி இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்துவீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பலகாரம் சுட்டு விட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்துள்ளார்.
இதில் பவித்ராவுக்கு தொடையில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பவிஸ்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments