2022 ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருது பெற உடனே விண்ணப்பிக்கவும்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான "கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் ஒரு பதக்கமும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினை பெற தகுதி உள்ளவர்.
2022 ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள் விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.
மேலும் உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments