காமாட்சி அம்மன் சன்னிதி தெருவில் உள்ள சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்..
காமாட்சி அம்மன் சன்னிதி தெருவில் உள்ள சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி ஆணையர் நாராயணன் போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், சன்னிதி தெருவில், பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் உள்ளன.
சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அகற்றினாலும், மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, மாநகராட்சி ஆணையர் நாராயணன் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.
அதனால் சன்னிதி தெரு சாலையோர கடைக்காரர்களிடம் ஏற்கனவே கடைகளை அகற்றம் குறித்து தெரிவித்துவிட்டோம். அதனை தொடர்ந்து இன்று சாலையோரம் ஆக்கிரமிப்பில் உள்ள நடைபாதை கடைகளை மாநகராட்சி ஆணையர் நாராயணன் மாநகராட்சி ஊழியர்கள் உடன் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பின் போது எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் தரிசனம் செய்யவந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதேபோல் வடக்கு மாடவீதியில் நடைபாதையில் உள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அதனையும் முன்றிலமாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
No comments
Thank you for your comments