இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து - பரபரப்பான சிசிடிவி காட்சி
காஞ்சிபுரம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை பட்டு சேலை வாங்கவும் கோவில்களில் தரிசனம் செய்யவும் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்
இந்த நிலையில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் இருந்து காந்திசாலை தேரடி சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஆட்டோவை முந்தி செல்லும் போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
இதன் தொடர்ச்சியாக விபத்தில் லேசான காயமடைந்த இருவரையும் அருகில் இருந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தற்போது இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
No comments
Thank you for your comments