காஞ்சியில் மாபெரும் வங்கி வாடிக்கையாளர் தொடர்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை ஜூன் 8 நடைபெறுகிறது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் பொது மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
வங்கித் துறையில் நவீன மயமாக்கப்பட்ட வரும் சேவைகள் வங்கி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் கடன் பற்றிய விவரங்கள் மின்னணு செயலிகள் மூலம் பணம் பரிமாற்றங்கள் போன்ற பல சேவைகளை எடுத்துரைக்கும் பொருட்டு அனைத்து வங்கிகள் ஓர் இடத்தில் குழுமி வங்கிகளின் சேவைகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான விளக்கங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments