Breaking News

ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கட்டப்பட்டுள்ள  சமுதாயக் கூடத்தை மாண்புமிகு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர் திறந்து வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் காட்ரம்பாக்கம் ஊராட்சியில் ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை மாண்புமிகு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று  (06.06.2022) திறந்து வைத்தனர்.




இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்ததாவது:

இன்றைய தினம்   ஹூண்டாய்   கனவு கிராம  திட்டத்தின் சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சமுதாய கூடத்தை அமைத்து தந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தின் மக்களின் சார்பில்  எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஹூண்டாய் நிறுவனத்தின் சமூக  சேவை பணிகளை மேற்கொள்ள  உருவாக்கப்பட்டதுதான்  ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியன் பவுண்டேஷன். இந்த அறக்கட்டளை 2018 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை   சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2018 முதல் இந்த அறக்கட்டளை மூலமாக காட்ரம்பாக்கம் கிராமத்தில்  பல்வேறு சமுதாய பணிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதில் குறிப்பாக ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையம் 70 வீடுகளில்  கழிவறை, வீடற்ற ஆறு குடும்பங்களுக்கு  நிரந்தர வீடு, தண்ணீர்  சுத்திகரிக்கும் இயந்திரம், சூரிய சக்தியால் இயங்கக்கூடிய தெருவிளக்குகள், மருத்துவ முகாம்கள், மருத்துவ முகாம்களின் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தல், வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வண்ணம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தல் குறைவான காலத்தில் மருத்துவ பொருட்கள் விநியோகம் இப்படி பல்வேறு பணிகளை நமது கிராமத்திற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் மூலம்  செய்து தரப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 25 ஆண்டு காலமாக சமுதாயப் பணிகளை மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கனவு கிராமத் திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் மேவலுர்குப்பம், வல்லக்கோட்டை, மதுரமங்கலம் ஆகிய கிராமங்கள் தத்து எடுக்கப்பட்டு திறன் பயிற்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மகளிர் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சமுதாயப் பணிகள்  சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதற்கு மாவட்ட மக்களின் சார்பாக எனது வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் நிறுவனங்களுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் அதேபோல் தொழில் நிறுவனங்களுக்கு நாங்கள் வைக்கும் ஒரே வேண்டுகோள்  உள்ளூரில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்க தேவையான நடவடிக்கைகள்  எடுக்குமாறு மாண்புமிகு குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments