Breaking News

கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் 37 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 பஞ்சாயத்துக்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி II ல் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

பஞ்சாயத்துக்களில் சிறப்பு முகாம் 07.06.2022 அன்று அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 


இச்சிறப்பு முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

மேலும், இச்சிறப்பு முகாமில் பட்டா மாறுதல், சிறு / குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பி. எம். கிசான் கடன் அட்டை (KCC) விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு பதிவுகள் மேற்கொள்ளுதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இம்முகாமினை சிறப்பிக்குமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments