Breaking News

திமுக ஆட்சியை விமர்சித்து டிஜிட்டல் பிரச்சாரம்

மதுரை: 

திமுகவின் ஓராண்டு வேதனை ஆட்சியை ஜெயலலிதா பேரவை சார்பில் டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற உள்ளோம் என்று ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம்   கூறியதாவது:

தமிழகத்தில் 50 ஆண்டு அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. 110 விதியின் கீழ் பல திட்டங்களை அறிவித்து, அவற்றில் 97 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளோம்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான திட்டங்களை சட்டப் பேரவையில் வலியுறுத்தியும், போராட்டங்கள் மூலமாகவும் பெற்றுத் தந்துள்ளோம்.

திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக தோல்வி அடைந்துள்ளது.

தற்போது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் நிலையங்களில் லாக்கப் மரணங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தொடர்ந்து அதிமுக போராடி வருவதால் 51 சதவீதம் பேர் சிறப்பான வலிமைமிக்க எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது என பாராட்டுகின்றனர்.

திமுகவின் ஓராண்டு வேதனை ஆட்சியை ஜெயலலிதா பேரவை சார்பில் டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments